

விநாயகப் பெருமானை வணங்கி விரதம் இருந்து,மாலையில் அவன் தாழ் வணங்கி, பிறை பார்த்து, விரதம் முடிப்பது நம் துன்பங்களைக் களையும்.
நைவேத்யம் இல்லாமலா ! கொழக்கட்டை பிள்ளையாருக்குப் பிடித்த நைவேத்யம் அல்லவா..
கொழக்கட்டை டிப்ஸ்
மேல்மாவு தயாரிக்க நைசான அரிசி மாவை மாக்கோலம் போட கரைப்பது போல கரைத்துக் கொள்ளவும்.பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு (தேங்காய் எண்ணெய் ) கிளறி ஒட்டாமல் வந்தவுடன் வேறு பாத்திரத்தில் மாற்றி காற்றுப் புகாமல் மூடி வைக்கவும். மெல்லிய துணியிலும் பொத்தி வைக்கலாம். வறண்டு போகாமல், கட்டி தட்டாமல் மாவு இருக்கும்.
தேங்காய் பூரணம் தயாரிக்க துருவிய தேங்காய் அளவு வெல்லம் எடுத்து கரைய விட்டு மணல் நீக்கவும்.பின்பு பாகு பதம் வந்தவுடன் சிறிது நெய்,சீனி சேர்க்கவும்.நல்ல பாகு பதம் வந்தவுடன் தேங்காய்,ஏலம் போட்டு இறக்கவும்.
சீனி சேர்ப்பதால் பளபளப்பு வரும்.
நன்கு உருட்டும் பக்குவத்தில் வராவிட்டால் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் நன்கு உருட்ட வரும்.
வக்ர துண்ட மஹாகாயம் சூர்யகோடி சமப்ப்ரபா
அவிக்னம் குரு மே தேவ சர்வ கார்யேஷு சர்வதா
ராம் கிருஷ்ண ஹரி.
No comments:
Post a Comment