Freelance Jobs

Humble Request

Please Post Your Valuable Comments Before leaving. It Will Be an Encouragement For Me!

visitors

Monday, May 9, 2011

2011 குரு பெயர்ச்சி பலன்கள்

2011 குரு பெயர்ச்சி பலன்கள்

வாசகப் பெருமக்களுக்கு வணக்கம் இப்பொழுது "குரு பெயர்ச்சி" என்ற விஷயம் தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.
நவகிரகங்கள் மிகவும் சுபராகப் கருதப்படுபவர் குருவாவார்.இவர் ஒவ்வொரு வருஷமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவதையே நாம் "குருப் பெயர்ச்சி" என்கிறோம்.இவர் பெயர்ச்சி ஆகும் பொழுது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும் அல்லது நாடாகட்டும் அல்லது உலகமாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை ஏற்படச் செய்வார்.
இந்த 2011 ம் ஆண்டிலே குருவானவர் 08.05.2011 ம் தேதி சித்தரை மாதம் 25 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9.23 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.அங்கு அவர் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 31.8.2011 அன்று வக்ரம் ஆகி 26.12.2011 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார்.அதன் பின் அவர் 16.05.2012 அன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
"வக்ரம்" என்றால் பின்னோக்கி செல்வதாகும் இருப்பினும் அவர் மேஷ ராசியில் சமார் 1 ஆண்டு காலம் சஞ்சாரம் செய்யும் பொழுது ஏற்படும் நற்பலன் மற்றும் கெடுபலன்கள் இரண்டையும் ஒவ்வொரு லக்னக்காரர்களுக்கும் என்னமாதிரியான பலன்களை ஏற்படுத்துவார் என்பதை மிகவும் விரிவாக விளக்கியுள்ளோம்.
"குருவானவர்" சுபரானவரே.அவர் எப்படி கெடுபலன்களைத் தருவார் என்பது பல வாசக நேயர்கள் கேட்பது எனக்கு புரிகிறது.அடிப்படையில் ஒவ்வொரு கிரகத்திற்கும் நற்பலன் மற்றும் கெடுபலன் இரண்டும் தருவதற்கு அதிகாரம் உடையவர்கள்.எனவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து மட்டுமே இறுதியான பலன்களைக் கூற முடியும்.இருப்பினும் "குரு" பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்று நமது மகரிஷிகள் உரைத்துள்ளனர்.எனவே அவர் மேஷ ராசியில் அசுபதி,பரணி,கார்த்திகை இந்த முன்று நட்சத்திரங்கள் வாயிலாக சஞ்சாரம் செய்யும் பொழுது ஒவ்வொரு லக்னதாரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்களை தருவார் என்பதை மிக விரிவாக விஞ்ஞான ரீதியாக எழுதியுள்ளோம்.
"ராகு-கேது" பெயர்ச்சி 08-06-2011 அன்றும் சனிப்பெயர்ச்சி 15-11-2011 அன்று பின் இரவும் பெயர்ச்சி ஆகிறார்கள்.இப்படி முக்கிய கிரகங்கள் எல்லாம் இவ்வாண்டு பெயர்ச்சியாவதையும் கணக்கில் கொண்டே நாம் பலன்கள் அடுத்துவரும் 08-06-2011 லிருந்து ஒன்றரை ஆண்டுகள் பலன்களையும் சனியானவர் 15-11-2011 க்குப்பின் இரண்டரை ஆண்டுகளையும் பலன் அளிக்கவல்லார்கள்.
எனவே நாம் குரு,ராகு,கேது,சனி இந்த நான்கு கிரகங்களையும் வைத்து பலன்களை விரிவாக விளக்கியுள்ளோம்.இதில் கூறப்பட்டுள்ள நற்பலன்கள் மற்றும் கெடுபலன்கள் எல்லாம் பொதுவானவையாகும்.எனவே வாசகர்கள் தங்களின் தனிப்பட்ட ஜாதகத்தின்படி தான் நல்லது மற்றும் கெட்டது நடக்கும் என்பதை உணர்வீர்களாக.
நாம் எப்பொழுதும் ராசியை வைத்துப் பலன் கூறுவதில்லை.உங்கள் ஜாதகப்படி உங்கள் லக்னம் எதுவோ அதன் அடிப்படையிலேயே உங்களுக்குப் பலன்கள் அமையும்.ஆம் லக்னம் என்பது உயிர்,ராசி என்பது உடல்.உயிர் இல்லாமல் இந்த உடல் இயங்காது.எனவே நாம் பூமியில் பிறந்த புள்ளியே லக்னம் ஆகும்.எனவே லக்னத்தின் அடிப்படையிலேயே உங்களுக்கு பலன்கள் தரப்பட்டுள்ளன.உங்கள் லக்னம் எது என்று தெரியாதவர்கள் உங்கள் ஜாதகப் புத்தகத்தில் "ல" என்று குறிப்பிடப்பட்டுள்ள ராசியே லக்னம் ஆகும்.இல்லையேல் நமது இணையதளத்தில் உள்ள ஜோதிட வெப்தளத்திற்குச் சென்றும் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக குருப்பெயர்ச்சி என்றால் ஆலய தரிசனம் செய்தல் வேண்டும் என்று நம்முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.குருப்பெயர்ச்சி என்றால் தற்பொழுது "ஆலங்குடி" மிகவும் பிரசித்தம் ஆகும்.அதே சமயம் "திருச்செந்தூர்" சென்று கடல் நீராடி அர்ச்சனை செய்ய தோஷம் நீங்கும் என்பது
விதி .தற்பொழுது ஆங்காங்கே உள்ள ஒரு சில ஊர்களில் உள்ள கோவில்களும் குருவுக்கு வழிபாடு ஸ்தலமாக அநேக குருப்பெயர்ச்சி நூல்களிலும்,புஸ்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே அவரவர் ஊர்களில் உள்ள பழமையான சிவன் கோவிலில் தட்சுணாமூர்த்தியை வழிபடுதல் மூலம் நற்பலன் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
நம்முடைய வலைதள நேயர்கள் உலகம் முழுவதிலும் பரந்து விரிந்துள்ளதால் குரு பகவானை மனதால் நினைத்து குருவுடைய காயத்திரி மந்திரமான.
விருஷ த் வஜாய வித்மறே !
க்ருணி ஹஸ்தாய திமஹி !
தந்தோ குரு ப்ரசோயாத்.

என்பதையும் வியாழக்கிழமை தோறும் நினைத்து அவரை வணங்கிவர வரக்கூடிய கெடுபலன்களைக் கலைந்த நற்பலன்களை நமக்கு நல்குவார் என்பதில் ஐயமில்லை.
மேலும் "குரு" மட்டுமே நம் ஜாதகத்தை இயக்குவதில்லை மற்றும் உள்ள 8 கிரகங்களும் மேலும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்களும் நம் வாழ்க்கையை இயக்குவதால் நாம் எதற்கும் கவலைப்படாமல் இறைவன் மேல் நம்பிக்கை வைத்து நம் கடமையைச் செய்து வர சகல நலன்களும் நமக்கு கிடைக்கும்.
நாம் பூர்வஜென்மத்தில் என்ன பாவம் மற்றும் புண்ணியம் செய்துள்ளோமோ அதற்குத் தக்கபடித்தான் இச்ஜென்மத்தில் நாம் நற்பலன் மற்றும் கெடுபலன்களை அனுபவிக்க முடியும்.எனவே நாம் எப்பொழுதும் நல்லதே நினைப்போம்.நல்லதே நடக்கும்.எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று அவரவர்கள் விருப்பம் ஆசை,அபிலாசைகள் பூர்த்தியாக எல்லாம்வல்ல பரம்பொருளாகிய "குருபகவான்" அருள் புரிவாராக.

1 comment:

  1. Casino | Casinos Near Atlanta, GA
    Find the best Casino 남양주 출장샵 Near Atlanta, GA 안성 출장마사지 hotels. At Casino Yoyo Hotel in 충청남도 출장마사지 Downtown 거제 출장마사지 Atlanta, you'll find the AAA 순천 출장샵 Four-Diamond hotel, casino, spa,

    ReplyDelete